பெண் ஒருவர் தான் திருடிய பொருட்கள், நகைகளை வைத்து டிக் டாக் செய்த பெண்ணை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அசாமின் கவுகாத்தியில், வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரை பார்த்துக் கொள்வதற்காக, தொண்டு நிறுவனம் மூலமாக வந்த பெண் தான் சுமி சுலிதா.

இந்த நிலையில் சுமி கலிதா, ஒருநாள் வீட்டில் ஒரு மூலையில் இருந்த வாட்ச் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு லக்கிம்பூரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து அந்த பெண்ணை தேடிப் பார்த்து, எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் அந்த பெண்ணை தேடுவதை நிறுத்திவிட்டனர்.

இந்த நிலையில்தான் அண்மையில் அந்த பெண், அந்த மூதாட்டியின் வீட்டில் தான் திருடிய நகை மற்றும் வாட்சை அணிந்துகொண்டு டிக்டாக்கில் வீடியோ எடுத்து பதிவிட்டு சிக்கியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, அந்தப் பெண் அனாமிகா என்கிற பெயரில் டிக்டாக் வீடியோவை பதிவிட்டு வந்ததைப் பற்றி பொ லிசில் பு கார் அளித்துள்ளனர். இதனால் டிக்டாக் ஐடியை வைத்து அந்த பெண்ணை தேடும் மு யற்சியில் பொ லி சார் இறங்கியுள்ளனர்.

By admin