தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகன் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு அவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதியை தமிழகம் மறக்கமுடியாது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் அவரது கூட்டாளி சுரேஷின் தாய் கனகவல்லி ஆகியோரை பொலிசார் முதலில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளையின் மூளையாக செயல்பட்டது முருகன் என்பது தெரியவந்தது. ஆனால், அவர் காவல்துறை கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார். காவல்துறை நெருங்கி வருவதை அறிந்ததும் பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில், திருடிய நகைகளை வைத்து பல தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி அதிரவைத்ததோடு பல்வேறு வகையில் சொகுசாக வாழ்ந்ததாக தெரிவித்தார்.

அவர் பல இடங்களில் கொள்ளையடித்ததன் மூலம் ரூ 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவர் இந்த நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.எனவே மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்ப்பதற்கு வசதியாக முருகனை ஜாமீனில் எடுப்பதற்காக, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் முயற்சியில் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

By admin