பொதுவாக நாகரீக வளர்ச்சி அடைந்த சில கிராமங்களை தவிர மற்ற கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு நிறைய வளர்ச்சி சார்ந்த விஷயங்கள் பல தெரிவதில்லை.அந்தவகையில் இங்கும் ஒரு தாய். சிங்கப்பூரில் இருக்கும் தன் மகனைப் பார்க்க முதன் முதலாக விமானம் ஏறிச் சென்றார். அந்த தாய் தன் மகனுக்காக மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதன் பக்கத்திலேயே காவலுக்கு நீட்டி முழங்கி படுத்தார். பயண அயற்சியில் தூங்கியும் விட்டார்.

இதுகுறித்து ரகுவசந்தன் என்னும் சிங்கப்பூரில் வாழும் தமிழர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில், ‘’இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார். இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளதால் அந்தத்தாய் அப்படி செய்திருக்கிறார்.

அந்தம்மா மிளாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து படுத்துள்ளார். இதை உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். பார்க்க கொஞ்சம் மனது கஷ்டமானது. பெற்றோரை வரவழைக்கும்போது இதுபோன்ற செயல்களை தவிர்க்க அறிவுருந்துங்கள்.

பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கித் திண்ணும் நெட்டிசன்களுக்கு வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம்கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாய் அன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணினி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை.”என பதிவிட்டுள்ளார்.

தாய்ப்பாசம் கொண்ட ஒவ்வொருவரையும் உருக வைத்து விட்டது இந்த பதிவு. அம்மாக்களுக்கு சிங்கப்பூராக இருந்தாலும், தன் பிள்ளையின் வீடு தானே? தற்போது இந்தப்பதிவு வைரலாகி வருகிறது.

By admin