நடிகை ஹரிப்பிரியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். இதன் பிறகு லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள் போன்ற சீரியல்கள் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கனா காணும் சீரியல் நடித்த நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இருவரும் கருது வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் இவர்கள் பிரிவிற்கு காரணம் தொகுப்பாளர் அசாத் தான். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வைத்து தவறான கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ஹரிப்பிரியா தனது இணையப்பக்கத்தில் ” எங்களுக்கு ஜாதி, மதம் எதிர்பார்ப்பு என ஏதும் இல்லை, ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான், அவன் என் காதலனோ, கணவனோ கிடையாது, மேலும் மகிழ்ச்சியாக பேசுவது என் பிறப்புரிமை, தவறு என்னுடையது இல்லை, பார்ப்பவரின் கண்களில் தான் உள்ளது” என்று கூறி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

By admin