சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பலகை இத பார்த்தா குபீர்ன்னு சிரிப்பீங்க

காஞ்சிபுரத்தில் பெருநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைக்கும், அங்குள்ள குளத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதை அதிர்ச்சியுடன் பார்க்கும், பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கடந்து செல்கின்றனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டு பகுதியில் உள்ள பொய்கை ஆழ்வார் குளம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. பல்லாண்டு காலமாக வற்றாமல் இருந்து வந்த அந்த குளத்தை காஞ்சிபுரம் பெருநகராட்சி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

இதனால் வறண்டு கிடக்கும் குளம் குப்பை கூலமாகவும், மரங்கள் வளர்ந்து காடாகவும் காட்சியளிக்கிறது. ஆனால் குளத்தின் கரையோரம் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை மட்டும் புதியதாக உள்ளது.

அந்த பலகையில் இடம்பெற்றுள்ள வாசகம், பார்ப்போரை சிரிக்க வைத்துவிடுகிறது.

இந்த குளம் மிகவும் ஆழமானது, இதில் யாரும் குளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது என்று பெருநகராட்சி வைத்துள்ள இந்த எச்சரிக்கை பலகையை பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு ஆச்சர்யத்துடன் கடந்து செல்கின்றனர்.

குடிமராமத்து திட்டத்தின் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருவதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், நகரின் மையத்தின் உள்ள இந்த குளத்திற்கே இந்த நிலைமை என்றால், மற்ற குளங்களின் நிலைமை எப்படி இருக்குமோ என்று சமூக ஆர்வலகள் கேள்வி எழுப்புகின்றனர்.

By admin