சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் ஏற்கனவே உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் 3 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை ஏன் இந்த அளவுக்கு தாக்கினீர்கள்? என்ற கேள்வியை முன்வைத்த போது, சாதாரண கைதிகளை போல தான் தாக்கினோம் என்றும், உயிரிழப்பு வரை செல்லும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதவி ஆய்வாளராக இருந்த பாலகிருஷ்ணன், மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், இனி தன் குடும்பத்தின் நிலை என்னவாகும் என எண்ணி விசாரணையின் போது கலங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் ஆசுவாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் 3 பேரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க கேட்டதன் பேரில் அதற்கான ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேருமே சிறைக்கு கொண்டு செல்லப்படும் வரை மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://youtu.be/5YXzLP5mTIw https://youtu.be/-MOVDdSEFOU எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை, https://youtu.be/raI6We-JRCo தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள். https://youtu.be/0p9J020QH2s உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும். https://youtu.be/JqNjmjQkToA மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம். https://youtu.be/2jAsmmge8p8

By admin