தலைமுடி உதிர்தலை நீக்கி, கூந்தலை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரச் செய்ய பெரிய வெங்காயம் உதவிபுரிகின்றது. வெங்காயத்தில் இருக்கும் சல்பர் தான் முடி வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. முக்கியமான உணவுப்பொருளாக வெங்காயத்தை முடி பிரச்சனைக்கு பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு மற்றும் முடி வெடிப்பு ஆகியவை எளிதில் சரியாகிவிடும்.

கூந்தலானது நன்கு வளர்ச்சி அடையச்செய்யும். இதில் உள்ள சல்பர் ஆனது முடி உதிர்வால் ஏற்பட்ட வழுக்கை தலையிலும் முடி வளர உதவி புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் தலையில் முடி உதிர்ந்தது போல் காணப்பட்டால், அந்த இடங்களில் நீங்கள் வெங்காய சாற்றை தடவி வரலாம்.

இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகமாக இருப்பதால் தலையின் ஸ்கால்ப்பில் எந்த வித தொற்றும் ஏற்படாமல் இருக்க பாதுகாக்க செய்கின்றது. அதுமட்டுமில்லாமல் வெங்காயத்தை வைத்து கூந்தலுக்கு பல விதமான ஹேர் மாஸ்க்குகளை செய்து தடவி வரலாம். இதை செய்வதால் கூந்தல் நன்கு வளர்வது மட்டுமில்லாமல், பட்டு போல மின்ன செய்யும்.

கூந்தல் நீளமாக வளர:

தேவையான அளவு வெங்காயத்தை அரைத்து அதனை தலையின் ஸ்கால்ப்பில் தடவி, ஒரு ஈரமான துணியால் தலையை கட்டிவிட வேண்டும். ஒரு 30 நிமிடம் வரை தலையை ஊற வைக்கலாம். பின்பு கூந்தலை அலசிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்துவந்தால் உங்களுடைய கூந்தல் நன்றாக வளர்ச்சி பெறுவது மட்டுமில்லாமல், ஸ்கால்ப்பில் ஏற்பட்ட பிரச்சனைகளும் எளிதில் போய்விடும். கூந்தல் கருமையாக மின்ன ஆரம்பித்துவிடும்.

வழுக்கை தலையில் முடி வளர :

கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் ஹேர் மாஸ்குகளில் வெங்காய ஹேர் மாஸ்க் மிகச்சிறந்தது. வெங்காயத்தை நறுக்கி அதை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள். பின்பு இதனை தலை முழுவதுமாக தடவிக்கொள்ளலாம். ஒருஅரை மணிநேரம் வரை காத்திருக்க வேண்டும். பின்பு தலையை கழுவிக் கொள்ளலாம். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வரலாம். இதை தொடர்ந்து செய்தால் தலையில் சொட்டையாக இருக்கும் இடங்களில் முடி வளர ஆரம்பித்து விடும்.

பொடுகுத் தொல்லை நீங்க:

பொடுகு பிரச்சனை உங்களுக்கு அதிகமாக இருந்தால் வெங்காய சாற்றுடன், எலுமிச்சை சாற்றை கலந்து நன்கு மசாஜ் செய்யலாம். இதை வாரத்திற்கு இருமுறை செய்துவாருங்கள். இதனால் தலையில் உள்ள ஸ்கால்ப் சுத்தமாக இருப்பது மட்டுமில்லமல் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்க செய்யும். கூந்தல் அடர்த்தியாக வளரவும் வெங்காயத்தை கண்டிப்பாக உபயோகம் செய்யலாம்.

முடி அடர்த்தியாக :

உங்கள் கூந்தல் அடர்த்தியாக வளர வேண்டும் என்றால், முட்டையின் வெள்ளைக் கருவுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் கூந்தலுக்கு தடவி அரைமணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். பின்பு முடியை அலசிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வருவதால் கூந்தல் அடர்த்தியாக வளர்வது மட்டுமில்லாமல், கருமையாக வளர்ச்சி பெரும். முட்டை கூந்தலை மின்ன செய்யும் திறமை உடையது. உங்கள் கூந்தல் நன்றாக வளர இயற்கை வைத்திய முறைகளை உங்கள் வீட்டிலே ட்ரை செய்து பாருங்கள் தோழிகளே!

By Admins