விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திற்காக ரஷ்யா நாட்டைப் போன்ற செட் சென்னையில் உருவாக்கப் பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். .டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. விக்ரம் பல வேடங்களில் நடித்து வருகிறார் என்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகப் படுத்துகிறது.இந்த படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் மியா ஜார்ஜ், கேஎஸ் ரவிகுமார், இர்பான் பதான் ஆகியோரும் நடிக்கின்றனர். கேஜிஎப் படத்தின் நாயகியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வந்த நிலையில் ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் படக்குழு மீண்டும் தயாராகிவிட்டனர். இருந்தாலும் பல சர்வதேச விமானங்கள் இயங்காததால் படக்குழு வெளிநாடுகளுக்குச் செல்ல இயலவில்லை. இருப்பினும் படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளாராம். எனவே ரஷ்யா நாட்டைப் போலவே செட் சென்னையில் உருவாக்கி படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

By Admins