தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் ஆவார். திரைப்பட பின்னணி எதுவும் இல்லாமல் தன்னுடைய கடினமான உழைப்பு மற்றும் திறமையான நடிப்பின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தின் சில திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது அவர் சினிமாவில் டாப் ஹீரோக்களின் பட்டியலில் உள்ளார்.

மேலும் அன்று முதல் இன்று வரை நடிகர் அஜித் மிகவும் எளிமையாகவும் நேர்மையாகவும் இருந்து வருவதால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் நடிகர் அஜித்தை மிகவும் பிடிக்கும். இவர் நடிகை ஷாலினியுடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடிக்கும்போது அவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வது போல ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்குள் நடந்து செல்கிறார்கள். இந்த வீடியோ வை கண்ட ரசிகர்கள் தல அஜித்துக்கு என்ன ஆச்சு என்று பதறி ப்போய் இருந்தனர். ஆனால் நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியின் ரெகுலர் ஹெல்த் செக் அப் காக மருத்துவமனைக்கு ஜோடியாக வந்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

By admin