பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் 4-வது சீசனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் இரண்டு ப்ரொமோ வெளியாகியநிலையில் குறித்த நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீசனிலும் கமல் தொகுத்து வழங்குகின்றார். ஆனால் இதன் போட்டியாளர் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீடு, நடிகை ரம்யாகிருஷ்ணன், தொகுப்பாளினி டிடி என புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இது உண்மையில் சீசன் 4ல் உள்ள புகைப்படம் தானா? அல்லது நெட்டிசன்கள் செய்த வேலையா என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

By Admins