பாம்பை கொன்ற பின்னர் கூட வீட்டிலுள்ள முதியவர்கள் அதன் அருகில் செல்ல வேண்டாம், அது மீண்டும் உயிரெடுத்து கடிக்கும் என்பார்கள்.

தற்கால இளைஞர்கள் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை கடிக்குமா என ஏளனம் செய்வதும் உண்டு.

ஆனால் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல. அவர்களது அனுபவ அறிவு யதார்த்தமானது. பொதுவாக பாம்புகள் இறந்த பின்னாலும் அவை கடிக்கும் வல்லமை உள்ளவை. இதனை மருத்துவரீதியாக reflex bite என்பர்.

பொதுவாக நல்லபாம்பு (Cobra), புடையன் பாம்பு (Vipers) போன்ற அதிக நஞ்சுள்ள பாம்புகள் இவ்வகையான reflex biteஐ வெளிப்படுத்தியுள்ளன.

பொதுவாக புடையன் பாம்பு 20 milli second-களுக்குள் இரையின் மீது விஷத்தை செலுத்தக்கூடியவை. இறந்த பின்னும் (தலை சிதையாமல் இருந்தால்) இதே வகை தாக்கத்தை வெளிப்படுத்தும்.

பல்லி போன்ற சில ஊர்வனவற்றின் உடல்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட பின்னும் துடிப்பது போல் பாம்புகளின் தலை துண்டாக்கப்பட்டாலும் அவற்றுக்கு அருகில் ஏதாவது தூண்டல் வரும்போது சடுதியாக கவ்விப்பிடிக்கும்.

இந்த Reflex Bite காரணமாக சீன உணவகங்களில் தலை வெவ்வேறாக்கப்பட்டு சில மணி நேரமான பாம்புகள் கடித்து சமையல்காரர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. இது அரிதான நிகழ்வாக இருந்தாலும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த வீடியோ வில் தலை துண்டாக்கப்பட்ட பாம்பு தனது உடலையே வெளித்தூண்டலாக உணர்ந்து கடிப்பதை காணலாம்.

By Admins