திருமணத்துக்கு பிறகு சஞ்சீவ் கார்த்திக் ‘காற்றின் மொழி’ சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்த நிலையில், ஆல்யா மானஸாவின் அடுத்த சீரியல் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் சீரியல் குறித்து அறிவித்த ஆல்யா மானஸா, விஜய் டிவி சீரியலில் களமிறங்குவதாகவும், அதனை ராஜா ராணி இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்குவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த தொடரின் பூஜை புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திரு்தார்.

இந்நிலையில் தற்போது அந்த தொடரின் புரோமோவை வெளியாகியுள்ளது. ராஜா ராணி சீசன் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் முதல் சீசனை போலவே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் கனவுள்ள நாயகியாக ஆல்யா மானஸா வருகிறார். இது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரே எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

By Admins