சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொ ரோனா தற்போது இந்தியாவிலும் பரவி 14,378 பேர் கொரோனா தொ ற்றால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் 480 பேர் உ யிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தை சேர்ந்தவர் யோருய் யாங். 35 வயது நிரம்பிய இவர், இந்தியாவின் ஆன்மிக வழிமுறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.இந்த நிலையில் தமிழகத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட அவர் ஊரடங்கு காரணமாக சொந்த நாட்டிற்கு திரும்ப செல்ல முடியாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதை குகை ஒன்றில் 11 நாட்களாக தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு விரைந்த போ லிசார்கள் அந்த சீன இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

By Admins