அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

பொதுவாக கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும் தோல் நோய்கள் ஏற்படுவது சகஜம்.தோலில் ஏற்படும் பூஞ்சை தொற்று, அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல காரணங்களால் தோல் நோய்கள் ஏற்பட கூடும்.

இது ஒரு தொற்று நோய் என்பதனால் பிறரது சோப்பை உபயோகிப்பது பிறரது துணியை அல்லது துண்டை உபயோகிப்பது போன்ற பல காரணங்களால் பரவுகின்றது என்று சொல்லலாம்.

அந்தவகையிலில் இது போன்ற தோல் நோய்களில் எளிதில் விடுபட சில சித்த மருத்துவங்கள் உதவி புரிகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

By Admins