நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா ஏற்கனவே ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு 3 பிள்ளைகளின் தகப்பனாக ஆனார்.அதன்பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக பரஸ்பர சம்மத்தின் பேரில் இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.

பின்னர், விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய படத்தில் நயன்தாரா நடித்தபோது இருவரும் காதலில் விழுந்தனர். இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில், தான் பிரபுதேவா பிசியோதெரபி டாக்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. மும்பையில், பிரபுதேவா நடனம் ஆடியதால் கால் மற்றும் இடுப்பில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவருக்கு பிசியோதெரபி செய்ய வந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், சென்னையில், கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. மணப்பெண் பெயர் டாக்டர் ஹிமானி. இவர் மும்பை சாக்கி நாக்கா பகுதியில் வசித்து வந்தவர்.

திருமணத்துக்குப் பிறகு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். அவர் திருமணத்தை உறுதி செய்த சகோதரர் ராஜூ சுந்தரம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

By Admins