நடிகர் கார்த்தி தனது உழவன் பவுண்டேஷன் மூலம் பதின்மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் சுத்தப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக நடித்திருந்தார். முழுக்க முழுக்க விவசாயத்தை பெருமைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன்பின்னர் விவசாயிகளுக்கு உதவும் விதமாக உழவன் பவுண்டேஷன் எனும் அமைப்பை உருவாக்கி மக்களுக்கு உதவி வருகிறார்.

தற்போது இந்த அமைப்பு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட பதிமூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கால்வாயை 4 லட்சம் ரூபாய் செலவில் சுத்தப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் கார்த்தி மற்றும் அவரது உழவன் அமைப்பிற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

By Admins