தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் கொட்டாச்சி. இவரின் மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கொட்டாச்சி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவரே கதை, திரைக்கதை எழுதி ஒரு புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘வலியும் வழியும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  ‘ஒரு இயக்குனரின் வலி’ என இப்படத்திற்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, திரைப்படத்துறையில் இயக்குனராக துடிக்கும் ஒரு வாலிபரின் வலியை இப்படம் பேசும் எனத்தெரிகிறது.

By Admins