இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருந்து வருகின்றனர். 21 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

இந்த கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்க பிரபலங்கள் பலரும் மத்திய மாநில அரசுகளுக்கு நிதி அளித்து வருகின்றனர். ஆனால் விஜய் இதுவரை உதவாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை இட்டதால் அவருடைய வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவருடைய வங்கிக் கணக்கில் பணம் போடவும் எடுக்கவும் முடியாமல் இருந்து வருவதாகவும் இதனால் தான் அவரால் மக்களுக்கு இந்த சமயத்தில் உதவ முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சனைகளை எல்லாம் முடிந்த பிறகு விஜய் நிச்சயம் உதவுவார் என அவரது தரப்பில் கூறப்பட்டு வருவதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, விஜய் நிச்சயம் உதவுவார். அவர் எந்த வகையில் உதவப் போகிறார் என்பதை மட்டும் பொறுத்திருந்து தான் பார்க்க வேணடும்.

By admin