தீபக் சுந்தராஜன் இயக்கத்தில் டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

டாப்ஸி மைய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர் பிரபல தமிழ் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்ராஜனின் மகன் ஆவார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ராதிகா, சுப்பு பஞ்சு, மதுமிதா, தேவதர்ஷினி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ராஜஸ்தானில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி இருவருமே இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கின்றனராம். முற்காலத்தில் நடிக்கும் கதை மற்றும் நிகழ் காலத்தில் நடிக்கும் கதை என இருவரும் டூயல் ரோலில் நடிக்க உள்ளனராம்.

படத்தின் தலைப்பு பற்றிய அப்டேட்-ம் கிடைத்துள்ளது. படத்திற்கு அன்னபெல் சுப்பிரமணியம்(Annabelle subramaniam) என்று தலைப்பு வைத்துள்ளார்களாம். அன்னபெல் டாப்ஸியாகவும், சுப்பிரமணியம் விஜய் சேதுபதியாகவும் இருக்க வேண்டும். படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Admins