தமிழ் திரையுலகில் பல முன்னனி நடிகைகள் இருந்தாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி, நம் ஊதா சடை ரிப்பன் ஸ்ரீ்திவ்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.. ரசிகர்கள் மட்டுமல்ல, ரசிகைகள் பலரும் அவருக்கு இருக்கின்றனர்…

பாவடை தாவணி கட்டி ரெட்டை சடை போட்டு ஓடி வருவதை பார்ப்பதற்கு நம் வீட்டின் செல்ல தேவதைகள் போல் இருப்பதாலோ? என்னவோ? அவர் நடித்த முதல் படத்திலேயே அனைவருக்கும் மிகவும் பிடித்து போய் விட்டது.. அதையும் தாண்டி, சிவகார்த்திகேயன் உடனான அவர் ஜோடி மிகவும் பேசப்பட்டது…

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து, காக்கிச்சட்டை படத்திலும், பின் ரெமோ படத்தில் கடைசி காட்சிகளிலும் சிவகார்த்திகேயனுடனே நடித்திருந்தார்.. அதன் பின் இளம்பெண்களின் ரீசன்ட் கிரஸ் அதர்வா வுடன் ஈட்டி படத்திலும், விஷாலுடன் மருது படத்திலும், அதைத்தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்காரத்துரை, காஸ்மோரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்…

அதர்வாவுடன் தற்போது ஒத்தைக்கு ஒத்த என்ற இன்னொரு படத்திலும் நடித்து முடித்துள்ளார்.. இன்ஸ்டாவில் அவரின் மேக்கப் இல்லாத புகைப்படங்களுக்காகவே பல ரசிகர் கூட்டம் உண்டு.. பெரிதாக போட்டோசூட் என்று செல்லாமல். வீட்டில் நார்மலாக இருக்கும் புகைப்படங்களே அவ்வளவு அழகாக இருக்கும்…

 

அப்படியிருக்க.. இப்போது இணையத்தில் சில போட்டோக்கள் வைரலாக பரவியிருக்கிறது.. அதில் அவர் சினிமாவிற்கு முன் அவர் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் போலும், அதிலும் அவர் இரு குழந்தைகளின் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்… அதனால் அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீ யா ய் பரவி வருகிறது… மேலும் இது போன்ற சுவாரசியமான தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்!!…

By maddy