நாம் வாழும் வாழ்க்கையானது நிரந்தரமில்லாதது. நாம் வாழும் வாழ்க்கையில் நாம் எப்போதும் எதிர்பார்ப்பது மட்டுமே நடப்பதில்லை . சில சமயங்களில் திடீரென வினோதமாகவும் ஏதாவது நடந்து விடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படித்தான் இங்கே ஒரு சிறுமி நண்டு பிடிக்கப் போக கண் இமைக்கும் நேரத்தில் ஏதேதோ நடந்து விட்டது. அவரது தந்தை அருகில் இருந்ததால் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். டெக்சாசியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்களது வீட்டின் பக்கத்தில் உள்ள ஒரு நீரோடையில் நண்டு மற்றும் மீனை விளையாட்டாக ஒரு குடும்பத்தினர் பிடித்துக் கொண்டிருந்தனர்.

குடும்பத்தின் தலைவரான தந்தை ஆண்ட்ரு, தன் குழந்தைகள் பிராண்ட்லின், கிரண்டியும், அவளது அண்ணனும் கூடவே ஒரு இளம்பெண்ணும் சேர்ந்து விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏதேச்சையாக அவர் அவரது கண்ணில் நீரோடையில் செல்லும் முதலை ஒன்று கண்களில் பட்டது.

அப்போது திடீரென அந்த முதலை நீரோடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி வருவதை ஆண்ட்ரூ கவனித்திருக்கிறார். அவரது நான்கு வயது மகளை நோக்கி பத்தடி இடைவெளியில் அந்த முதலை நெருங்கி விட்டது.

திடீரென அது தண்ணீரில் மூழ்கிவிட்டது. அடுத்து எப்படியும் தன் மகளை நோக்கி பாயும் என யூகித்த தந்தை ஆண்ட்ரூ, குழந்தையோடு இருந்தவர்களை கதவு வழியாகத் தன் வீட்டுத் தோட்டத்துக்குள் தள்ளிவிட்டு, குழந்தையையும் தூக்கி வேலிக்கு அப்பால் வீசியிருக்கிறார்.

அந்த முதலை பாயுமா இல்லையா என்றெல்லாம் யோசிக்காமல் இதை ஒரு குழந்தையின் தந்தையாக உடனே செய்தார் ஆண்ட்ரூ. இந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து வனத்துறைக்கும் ஆண்ட்ரூ தகவல் கொடுத்தார்.

அவர்களின் அரை மணிநேர போராட்டத்துக்குப்பின் 600 பவுண்ட் எடை கொண்ட அந்த ராட்சத முதலையை மீட்டனர். ஒருவேளை அது குழந்தையை நோக்கிப் பாய்ந்திருந்தால் அந்த வேலியையே உடைத்திருக்கும். அதன் எடை அவ்வளவு உள்ளது என்கிறார் குழந்தையின் தந்தை ஆண்ட்ரூ.

By Admins