பிக்பாஸ் சீசன் 4ல் நடிகை ஷாலு ஷம்மு கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க போன்ற படங்களில்
நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் கூட பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீரா மிதுன் மீது புகாரளித்து பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசனில் இவர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இணைய ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இன்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினர் தரப்பில் இருந்து அழைப்பு வந்திருப்பது உறுதியாகிறது.

நிகழ்ச்சிக் குழுவின் இறுதி முடிவில் ஷாலு ஷம்மு தேர்வு செய்யப்பட்டால் இந்த சீசனில் அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் காணலாம்.

By Admins