நாட்டுக்கோழி முட்டை நல்லதா? சாதாரண கோழிமுட்டை நல்லதா? இனிமேலும் ஏமாறாதீங்க!

தொப்பை போடுற மாதிரி வயிறு கொஞ்சம் முன்னால் வர, அப்பாவிடம் ஜிம்முக்கு போகட்டுமா? என்று கேட்டேன். போறதெல்லாம் போ! அதுக்கு முன்னாடி நாட்டுக்கோழி முட்டை, பச்சையா குடி. அப்போ தான் தெம்பு வரும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். எதையும் சமைக்காமல் அப்படியே உண்டால், பாக்டீரியா தொற்று வந்துவிடும் என்பதை எப்போதோ படித்தது நியாபகத்து வரவே, அப்பாவிடம் சரி என்று மண்டையை மட்டும் ஆட்டிவிட்டு ஜிம்முக்கு போனேன்.

ஜிம் மாஸ்டரிடம் பேச்சு வாக்கில், நாட்டுக்கோழி முட்டை குடிச்சா நல்லதாங்க. அப்பா சொன்னாங்க என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லையாம். சில நேரங்களில் நமக்கு கிடைப்பது உண்மையான நாட்டுக்கோழி முட்டையே இல்லையாம். ஒரிஜினல் நாட்டுக்கோழி முட்டை போலவே, அச்சு அசலாக மாற்றம் கொண்டு வர, எத்தனையோ நுணுக்கம் இருக்கிறதாம். வீணா காசு செலவு பண்ணாம, நாம் எப்பவும் சாப்பிடும் முட்டையே சாப்பிடலாம். அதில் எந்த குறையும் இல்லையாம்.

பிராய்லர் கோழி முட்டை என்று சொல்லி நம்மை பயமுறுத்த பார்ப்பார்கள். பிராய்லர் கோழி கறிக்காக மட்டுமே வளர்த்தப்படும். நாம் அதிகம் நுகரும் முட்டை, லேயர் கோழி கோழியிலிருந்து வருகிறது. முட்டையிடுவதற்கு என்றே உள்ள கோழியினம் இது. கடைசியாக கறிக்கு சொல்லும் வரையில், முட்டையிட்டுக்கொண்டே இருக்கும். பிராய்லர் கோழி வேறு, லேயர் கோழி வேறு இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது. அதே போல நாட்டுக்கோழி முட்டையில் உள்ள சத்துக்கும், லேயர் கோழி முட்டையில் உள்ள சத்துக்கும் பெரிதாக மாற்றம் ஒன்றும் கிடையாது.

வைட்டமின் சி தவிர, மற்ற சத்துக்கள் எல்லாமே முட்டையில் அடங்கியுள்ளது. கலப்படம் இல்லாமல் கிடைக்கும் உணவு என்பதால், மக்களிடம் நுகர்வு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு இந்தியர் வருடத்திற்கு 180 முட்டைகளை சாப்பிடலாம் என்று ஆய்வு செல்கிறது. குறைந்த செலவில் நிறைந்த சத்துக்களை பெறக்கூடிய உணவாக விளங்குகிறது. இதில் தான் சத்து அதிகம். அதில் குறைவு என்று, முட்டையை பொறுத்த வரைக்கும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. சாதாரண கோழி முட்டையிலேயே எல்லா சத்துக்களும் நிறைந்திருக்கிறது.

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,

தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

 

By admin