தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா. தமிழில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கவர்ச்சியில் ரசிகர்களை மயக்குவதில் இவர் கில்லாடி.

தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக முன்ணணி நடிகையாக இருந்த இவருக்கு இஞ்சி இடுப்பழகி என்ற படத்தின் மூலம் வந்தது ஆப்பு. டெடிகேஷன் என்று கூறிக்கொண்டு கிடுகிடுவென உடல் எடையை கூட்டி குண்டானார் அம்மணி.

இந்தநிலையில் அனுஷ்காவின் திருமணம் பற்றி அவ்வப்போது ஏதாவது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தனக்கு திருமணம் நடந்தால் தானே அறிவிப்பதாக அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

திருமணம், காதல் குறித்து அனுஷ்கா மனம் திறந்து பேசியுள்ளார். இது பற்றி அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, திருமணம் என்பது புனிதமானது. அவசரப்பட்டு எல்லாம் திருமணம் செய்ய முடியாது. அதுவாக நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கடந்த 2008ம் ஆண்டு ஒருவரை மனதார காதலித்ததாக கூறியுள்ளார். அது ஒரு அழகான காதல். ஆனால் அந்த நபர் யார் என்று சொல்ல முடியாது. அந்த காதல் நிலைத்திருந்தால் அவரின் பெயரை சொல்லியிருப்பேன்.

ஆனால் அந்த காதல் ஒர்க்அவுட் ஆகவில்லை. இருப்பினும் அந்த காதலை நான் இன்னும் மதிக்கிறேன் என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.விரைவில் திருமண அறிவிப்பு வரும் காத்திருங்கள் என கூறியுள்ளார்.

By spydy