நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் மொத்தமாக 163 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மதுக்கடைகள் அனைத்தும் 9-ந் தேதி காலை மூடப்பட்டன.

இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறந்து செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது.

ஒரு கடைக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 500 பேர் மது வாங்க அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து மது வாங்க வருபவர்களுக்கு டோக்கன் 7 நாட்களும் ஒவ்வொரு நிறத்தில் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று கருநீலம் நிறத்தில் டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் கடையின் எண், நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது. மது வழங்குவதில் க ட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. தேவையான அளவு மதுபாட்டில்களை ஒவ்வொருவரும் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டது.

இதன்மூலம் டாஸ்மாக் வருவாய் மொத்தமாக 163 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மதுக்கடைகள் திறக்க தொடர்ந்து எ திர்ப்புகள் நிலவி வந்த போதும் நீண்ட நாட்களுக்கு பிறகு தாராளமாக மது விற்பனை நடப்பதால் குடிமகன்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

By Admins