துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதியது.

இன்றைய ஆட்டத்தில் தில்லி அணி சென்னை அணியை 44 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் டெல்லி அணியின் பேட்டிங் செய்த போது சென்னை வீரர் சாம் கரண் செய்த செயல் தற்போது ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

சாம் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தை ரிஷப் பண்ட் எதிர்கொண்டார்.

பண்ட் அந்த பந்தை லேசாக தட்டிவிட சாம் அதைப்பிடித்து தோனியை நோக்கி வீசினார். ஆனால் பந்து தோனியை தாண்டி வேகமாக பவுண்டரிக்கு ஓடியது.

மறுபுறம் பண்ட் ஓடி ஒரு ரன் எடுத்து விட்டார். ஆக அந்த ஒரே பந்தில் டெல்லி அணிக்கு 5 ரன்கள் கிடைத்து விட்டது.

 

By Admins