நமது நோயெதிர்ப்பு மண்டலம் தான் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் இது நம்மை நோக்கி வரும் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை களை எதிர்த்து போராடக் கூடியது.

இதன் மூலம் தான் நமக்கு வரும் நோய்களை நாம் தடுக்க முடியும். சரியற்ற உணவுப் பழக்கம், மன அழுத்தம் போன்றவை நம் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.எப்படி கண்டறிவது.

நமது நோயெதிர்ப்பு மண்டலம் போர் வீரர்களைப் போல் செயல்படக் கூடியது. அந்நியக் கிருமிகள் உள்ளே நுழையும் போது அதை அழித்து நமது உடலை காப்பது தான் இதன் வேலை. இந்த மண்டலம் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் இவற்றால் உருவான ஒரு பாதுகாப்பு கட்டமைப்பாகும்.

இந்த செல்கள் தான் வெள்ளை அணுக்கள் என்று அழைக்கப்படுகிறது. எந்த உறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதோ அதை பாதுகாப்பது இதன் கடமை. இந்த வெள்ளை அணுக்கள் தைமஸ், மண்ணீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையில் அமைந்துள்ளது. இது லிம்போடிக் உறுப்பு என்று அழைக்கப்படுகிறது.

இந்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நோய் களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.

By Admins