பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா, சினிமா குடும்பத்திலிருந்து வந்த வாரிசு என்றாலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர்.

பிக்பாஸில் கலந்து கொண்ட பின்னர், எதையும் நேருக்கு நேராக பேசுபவர், தைரியமான பெண் என்றெல்லாம் ரசிகர்கள் புகழாரம் சூட்டினர்.

இந்நிலையில் இவர் ஒரு வயதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தூக்கி வைத்திருக்க பட்டு பாவாடையில் அழகாக ஜொலிக்கிறார் குட்டி வனிதா.

அத்துடன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

By Admins