சமீபகாலமாகவே மக்கள் மத்தியில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாகி வருகிறது.பெரிய திரையில் வாய்ப்பில்லாத பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க வந்துள்ளனர்.அந்தவகையில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியல் நீதானே என் பொன்வசந்தம்.

மராத்தியில் ஒளிபரப்பாக வெற்றிபெற்ற சீரியலின் ரீமேக்காக இது தற்போது ஒளிபரப்பப்படுகிறது.நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த 40 வயது நபருக்கும் இடையில் நடக்கும் காதல் கதைதான் இந்த சீரியல்.

இந்த தொடரில் கதாநாயகனாக பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். வெள்ளித்திரையில் பெரிய பெரிய ஹீரோக்கள் கூட கடைசியில் சீரியலில் தஞ்சம் புகுவதை பார்த்திருக்கிறோம்.அந்தவகையில் தற்போது இவரும் சேர்ந்திருக்கிறார்.

ரோஜா வனம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இவர் தமிழில் ரோஜாக்கூட்டம்,ராமச்சந்திரா,இனிதுஇனிது காதல் இனிது போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் சில படங்களை இயக்கியுள்ளார்.இந்தநிலையில் தற்போது இந்த சீரியலுக்கு பெரும் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது.

By admin