இப்போதெல்லாம் மாதாந்திர வீட்டு பட்ஜெட்டில் தரை துடைக்க, வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் லோஷன்களுக்கும் பணம் ஒதுக்குகிறோம். ஆனால் பணமே செலவு செய்யாமல் வீட்டை இயற்கையான முறையிலேயே சுத்தம் செய்ய ஒரு சூப்பர் ஐடியா இருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

முதலில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு கல்உப்பு சேர்க்க வேண்டும். கல் உப்பு அடிப்படையில் நல்ல கிருமிநாசினி. இப்போது ஒரு கற்பூரத்தை எடுத்து அதை நன்றாக நசுக்கி, பொடியாக்கி இந்த தண்ணீரோடு சேர்க்க வேண்டும்.

இது நல்ல வாசனையும் இருக்கும். அதே நேரம் கிருமி நாசினியாகவும் செயல்படும்.

இதனோடு இரண்டு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். அதாவது நாம் பெரிய இடத்தை துடைப்பதாக இருந்தால் இரண்டு ஸ்பூனும், குறைவான இடம் என்றால் ஒரு ஸ்பூனுமே போதுமானதாக இருக்கும்.

இது தண்ணீரில் கலந்துவிடும் என்பதால் டைல்ஸில் கறை படியும் என அச்சம் கொள்ள வேண்டியதும் இல்லை. இது எல்லாமே வீட்டிலேயே இருக்கும் பொருள்கள் தான். கூடவே வீட்டு பக்கத்தில் வேப்பமரம் இருந்தால், வேப்ப இலையையும் கைப்பிடி அளவுக்கு சேர்த்துக் கொள்ளலாம். இதனோடு வேண்டுமென்றால் மட்டும் கொஞ்சம் செண்ட் உள்ளிட்ட ஏதாவது வாசனை திரவியத்தையும் சேர்க்கலாம். இதை தேவை இருந்தால் மட்டும் சேர்த்தால் போதும்.

இதை எல்லாமே நன்றாக கலக்கிவிட்டுவிட்டு மோப் மூலமாக துடைக்கலாம். இப்படி துடைக்கும் போது கடையில் வாங்கும் லிக்கியூட்களை விட சுத்தமாகவும், வாசனையாகவும் வீடு மாறி விடும்.

By Admins