இந்தியாவில் திருமணத்தின் போது ஏற்பட்ட பதற்றத்தில் மண மேடையிலே மாமியார் மருகள் கால்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த நிகழ்வு கேரள மாநிலத்தில் இடம்பெற்ற திருமணத்தின் போது நடந்ததாக தெரியவருகிறது.

அந்த வீடியோவில் மண மேடையில் உறவினர்கள் சூழ மணமகன்-மணமகள் ஆகியோர் இருக்கின்றனர். முறைப்படி மணமகள் மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம்.

ஆனால், இத்திருமண நிகழ்வின் போது மருமகளிடமிருந்து பூ, வாழைப்பழம் பெற்றுக்கொண்ட மாமியார், திருமண பதற்றம் மற்றும் குழப்பம் காரணமாக மருமகள் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றது இருவரையும் சங்கடத்திற்குள்ளாக்கியது.

எனினும், இந்நிகழ்வை கண்ட மண்டபத்திலிருந்த அனைவரும் சிரித்து மகிழந்தனர். குறித்த காட்சி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

By admin