பொதுவாகவே தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்பார்கள். அதனால் தான் பலரும் காலையில் எழுந்ததுமே டம்ளரில் தண்ணீர் நிரப்பி மடக், மடக்கென குடிக்கின்றனர். அதிலும் சுடு தண்ணிருக்கு இருக்கும் மவுசே தனி தான். நம்மை ஒல்லியாகக் கூட மாற்றும் வலிமை சுடு தண்ணீருக்கு உண்டு.

சுடுதண்ணீரைத் தொடர்ந்து பத்து, பதினைந்து நாள்களுக்கு குடித்து வந்தால் உடல் ஒல்லியாகும். இதை ஹாட் வாட்டர் தெரபி என்கிறார்கள். நாம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் மெட்டபாலிசம் சீராகிறது. அதனால் தான் கொழுப்பு குறைகிறது. அதேபோல் சுடுதண்ணீர் நம் வயிற்றுக்குள் சென்றதும் ரத்த ஓட்டம் வேகமெடுக்கும். சுடுதண்ணீரின் சூட்டை எதிர்கொள்ள நம் உடல் மெட்டபாலிசம் சீராகிறது. இதனால் உடலில் சேர்ந்து இருக்கும் கொழுப்பு மெது, மெதுவாக கரையத் துவங்குகிறது.

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி விடும். இது நம் மெட்டபாலிசத்தையும் தூங்கி எழுந்ததுமே வேகப்படுத்திவிடும். இதன் அளவு 200 மில்லியாக இருக்க வேண்டும். இதேபோல் 2வது கிளாஸ் தண்ணீரை காலை சாப்பாட்டுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக குடிக்க வேண்டும்.

 

இதனைத் தொடர்ந்து மூன்றாவது கிளாஸை காலையில் டிபன் சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குடிக்க வேண்டும். நான்காவது கிளாஸை மதியம் சாப்பாட்டுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகக் குடிக்க வேண்டும். இதேபோல் ஐந்தாவது கிளாஸை மதியம் சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குடிக்க வேண்டும். அதே போல் இரவு சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிளாஸ்ம், இரவு சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு பின்பு ஒரு கிளாஸ்ம் குடிக்க வேண்டும். இப்படியாக நாள் ஒன்றுக்கு மொத்தம் 7 கிளாஸ் வரும். இந்த 7 கிளாஸ் சுடு தண்ணீரிலும் எழுமிச்சை சாறு, தேன் ஒவ்வொரு ஸ்பூன் சேர்க்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

இது வழக்கமாக நீங்கள் டீ, காபி குடிக்கும் அளவுக்கு சூடாக இருந்தால் போதும். ஒரே மூச்சில் மடக், மடக்கென குடிக்கக் கூடாது. ஒவ்வொரு ஷிப்பாக உறிஞ்சி குடிக்க வேண்டும். இந்த 7 கிளாஸ் சுடுநீரை பத்து, பதினைஞ்சு நாளுக்கு குடிச்சுப் பாருங்க..ஒல்லியா செம ஸ்மார்ட்டா ஆகிடுவீங்க…

பெரும் செலவு எதுவும் இல்லாத இதை முயற்சித்துத் தான் பாருங்களேன்.

By Admins