இந்திய மாநிலமான தமிழகத்தில் திருச்சி மவாட்டம் வரகனேரி பகுதியை சேர்ந்த போவாஸ் என்பவருக்கு, 4 வயதில் டெய்சன் என்ற மகன் உள்ளான்.

தனது பெற்றோருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற டெய்சன், மொட்டை மாடியில் சிறுவர்-சிறுமிகளுடன் பலூன்களை வைத்து விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது பறந்து சென்ற பலூனை பிடிக்க முயற்சி செய்தபோது, மாடியில் இருந்து சிறுவன் தவறி விழுந்தான். இதில், படுகாயமடைந்த அச்சிறுவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தான்.

பலூனை பிடிக்க சென்ற சிறுவன், மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Admins