கடற்கரைக்கு அருகில் பிடிபட்ட ஒரு அபூர்வ கடல் உயிரினம் இணையத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

அலாஸ்கா கடற்கரை அருகில் மூன்று வாரங்களுக்கு முன் பல கால்களுடன் ஒரு உயிரினம் பிடிப்பட்டுள்ளது. அந்த உயிரினத்தை ஆங்கலர் வாசர் அலஃபோர்டு என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், இந்த உயிரினத்தின் பெயர் ’பாஸ்கெட் ஸ்டார்’ என்பதாகும். அதை பிடித்துவிட்டு மீண்டு கடலுக்குள் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த உயிரினம் ஸ்டார் மீன்களை போன்றது தானாம். பல கால்கள் கொண்ட அதன் உடலமைப்பால் கடலில் ஊர்ந்து, சென்று இரையை பிடிக்கும் வல்லமை கொண்டதாம்.

By Admins