நம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை திரைப்படமாக்கி வெற்றி பெரும் ஒரு சில இயக்குநர்களின் இயக்குநர் தங்கர்பச்சனும் ஒருவர்.இவர் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் ஆகிய வித்தியாசமான கதைகளங்களை கொண்ட வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இவர், இயக்குநர் என்பதையும் தாண்டி, ஒளிப்பதிவாளர், நடிகர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது 10 வது படத்தில் தனது மகனான விஜித் பச்சனை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.இதற்கான வேலைகள் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.அந்த புகைப்படங்களை நீங்கள் காணலாம்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிலனா, அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்பொழுது இந்த திரைப்படத்தின் பட பிடிப்புகள் நடந்து வருகிறது.அவரை போல் அவாரது மகனும் பெயர் எடுப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

இந்நிலையில் இது குறித்து தங்கர்பச்சன் கூறும்போது எனது மகன் விஜித் பச்சான் சினிமாவில் இன்று பயணத்தை தொடங்கி இருக்கிறார். எனது இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. என்னை ஆதரித்து வளர்த்தெடுத்தது போலவே அவரை வாழ்த்தி நிறை குறைகளை சுட்டிக்காட்டி வளர்த்தெடுக்க வேண்டுகிறேன்.என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By Admins