10 மாதக் குழந்தையிடம் பாட்டு பாடி இரத்தப் பரிசோதனை செய்ய இரத்தம் எடுக்கும் மருத்துவரின் காணொளி ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது.

குறித்த காணொளியை குழந்தையின் தாய் வெளியிட்டுள்ளார்.

இப்படி பாட்டு பாடுவது வாடிக்கையாக வைத்துள்ளதாக மருத்துவர் ரியான் கொய்ட்ஸி குறிப்பிட்டுள்ளார். அது காண்போருக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் அதனால் சிரிப்பார்கள், ரசிப்பார்கள்.

இது என்னுடைய மருத்துவ முறை என்றும் கூறியுள்ளார். அவர் மருத்துவம் மட்டும் படிக்கவில்லை முறையான கிளாசிக்கல் மியூசிக்கும் கற்றறிந்துள்ளார்.

இதேவேளை, என் மகள் இரத்தம் எடுத்தபோது எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் எப்போதும் போல் விளையாடினாள் என்றும் குழந்தையின் தாய் குறிப்பிட்டுள்ளார். அதனை பார்த்த இணையவாசிகள் இதுபோன்ற மருத்துவர்கள் இன்னும் பலர் வரவேண்டும் என்று கூறி வருகின்றனர். மருத்துவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

By Admins