கடந்த 5ம் திகதி சென்னையில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பி-யின் உடல்நிலைக் குறித்து பலரும் தங்களது பதிவினை வெளியிட்டு வருகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட இரண்டு நாளில், தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 14ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நலம் திடீர் என்று மோசமடைந்து விட்டதாகவும், மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்பு சற்று இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் நேற்று இவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருந்துள்ளது. இவர் நலமுடன் வீடு திரும்புவதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரதிராஜா கண்ணீர் சிந்தி வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

By Admins