கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹடகலி நகரத்தை சேர்ந்தவர் ஆதவரவற்றவரான பசவா.

45 வயதான அவர் மனநிலை பா திப்புடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது பின்புலம் குறித்து யாருக்கும் தெரியவில்லை.

அவர் நீண்ட ஆண்டுகளாக ஹடகலி நகரில் வசித்து வந்துள்ளார்.

பொது மக்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே யாசகமாக கேட்டு பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார் அவர்.

அதற்கு மேல் ஒரு பைசா கூட வாங்க மறுத்து விடுவாராம்.

கூடுதலாக கொடுத்தாலும் அதற்கான சில்லறையை சரியாக அவர்களிடமே கொடுத்து விடுவாராம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சாலை விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

ஆனால் உயிரிழந்த ஆதரவற்ற மனிதரின் இறுதி ஊர்வலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Admins