நீலிமா ராணி “தேவர்மகன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து இன்று வரை நடித்து கொண்டு இருப்பவர். சின்னத்திரையிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

தற்பொழுது தலையணை பூக்கள் மற்றும் அரண்மனை கிளி போன்ற தொடர்களில் தொடர்ந்து முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். நீலிமா சினிஉலகத்திலும், சின்னத்திரையிலும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நடிகை ஆவார். இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார்.

இவர் டிவி சீரியல் பலவற்றில் நடித்திருந்தாலும் “அரண்மனை கிளி”யில் வரும் துர்கா ரகுவரன் கதாபாத்திரம் இவருக்கு நிறைய பெயர் வாங்கித் தந்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் வாங்கித்தந்தது.

தற்போது இவர் இந்த நாடகத்திலிருந்து விலகப்போவதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். “நான் எப்போதும் கேமராவிற்கு முன் நடிக்கும் பொழுது சந்தோசமாக இருப்பேன். காலத்தின் கட்டாயத்தாலும், சில பொறுப்புகளாலும் இனி நான் “அரண்மனை கிளி” நாடகத்தில் நடிக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார்.

By spydy