தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் மோகம் இன்னும் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. கொரோனா ஊரடங்கால் மந்தமாக இருந்த சீரியல் வட்டாரம் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டதால் புத்துணர்வு அடைந்துள்ளது.

ஏற்கனவே சில சீரியல்கள் இந்த கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்டது. 4 மாதங்களுக்கும் மேலாக இடைவெளி ஏற்பட்டுவிட்டதால் மக்கள் கதையை விட்டு நீண்ட தூரம் விலகி சென்றது போலாகிவிட்டதாம். இதனால் டிவி சானல்கள் புதிய சீரியல்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதில் சீரியல்களில் முன்னணியில் இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூர்யவம்சம் என புதிய சீரியல் நேற்று முதல் ஒளிபரப்பாகிவருகிறது.

நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மனைவி பூர்ணிமா முக்கிய வேடத்தில் இதில் நடிக்க ராஜேஷ், நிகிதா, சாதனா ஆகியோரும் நடிக்கிறார்களாம்.

இந்த சீரியல் வெவ்வேறு விதமான கலாச்சாரத்தை கொண்ட குடும்ப கதை தானாம்.

By Admins