நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு இப்போது தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. மேடைக் கலைஞராக இருந்து வெள்ளித்திரைப்பக்கம் வந்த ரோபோ சங்கர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அன்னைக்கு காலைல என ரோபோ சங்கர் கதை சொல்வதுபோல் பேசும் நகைச்சுவை பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

தற்போது அவரின் மனைவி பிரியங்காவும் டிவி, சினிமா என வந்துவிட்டார்.இவர்களின் மகள் இந்துஜா அண்மையில் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார்.

நேற்று அன்னையர் தினம். இந்நிலையில் இன்று அதிகாலை பிரியங்காவின் அம்மா லலிதா காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.இதனால் ரோபோ சங்கர் குடும்பமும் ரசிகர்களும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

By admin