கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு என்ற பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கடந்த வியாழக்கிழமை இரவு கானத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இன்னோவா சொகுசு காரை மறித்து போலீசார் சோதனையிட வேண்டும் என்று கூறினர். அப்போது அந்த காரில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் காரை சோதனையிடுவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதன் காரணமாக வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சோதனையில் காரின் உள்ளே 96 பீ ர் பாட் டில்கள் மற்றும் 8 ம துபா ட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக போலீசார் அந்த காரை ஓட்டிவந்த சென்னை அபிராமி புரத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற நபரை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் கார் ஓட்டுனர் செல்வகுமார் என்பவரை பெயிலில் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த மது ப்பிரியர்கள் செங்கல்பட்டு மாவட்ட எல்லை பகுதியில் திறந்துள்ள டா ஸ்மா க் கடையில் ம து பாட்டில் களை வாங்கி கொண்டு சென்னை திரும்பும்போது பொலிசார் சோ தனையில் சிக்கும் போது அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலைத்தில் சி றைபிடி க்கும் பொலி சார், நடிகையின் காரை மட்டும் ஏன் விடுவித்தனர் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

By admin