தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்கள் நடித்த நடிகை ஷீலா. தெலுங்கில் டாப் ஹீரோக்களான அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா போன்றவர்களுடன் நடித்துள்ளார் ஷீலா.

தமிழில் வாய்ப்புகள் குறைந்த பிறகு மற்ற மொழி படங்களில் மட்டும் தான் நடித்துவந்தார் அவர். கடைசியாக கன்னடாவில் ஹைப்பர் என்ற படத்தில் நடித்திருந்தார் ஷீலா. அது 2018ல் திரைக்கு வந்தது.

அதன் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் ஷீலா. தற்போது அவர் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஷீலாவுக்கு இப்போது 30 வயது ஆகிறது.

சென்னையில் நடந்த அவர்கள் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் இது என கூறப்படுகிறது.

திருமணம் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ஷீலா “இந்த நாள் எங்களுக்கு சிறப்பானது. ஒப்பிட முடியாத தருணம் இது. எங்கள் இதயம் முழுவதும் மகிழ்ச்சியை உணர்கிறோம். ஒரு புதிய நாள், ஒன்றாக எங்கள் புதிய வாழ்க்கையை துவங்குகிறோம்” என கூறியுள்ளார்.

By spydy