எளிதான ஈ.எம்.ஐ.யில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை வழங்குவதாக சுமார் 2,500 பேரை ஏமாற்றியதற்காக ஒரு பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடியிருக்கும் ஜிதேந்தர் சிங் என்பவர் தன்னுடைய நண்பர் பிரவீன் குமார் என்பவரோடு சேர்ந்து கொண்டு www.mobilityworld.in என்ற இணையதளம் மூலம் மக்களுக்கு எளிதான மாத தவணையில் ஆண்ட்ராய்டு போன் வழங்குவதாக அறிவித்தார் .முதலில் 1499 ருபாய் செலுத்தினால் போதும் உடனே மொபைல் போன் உங்களின் வீடு தேடி வரும் என்ற அறிவிப்பால் அவரின் இணையதளத்தில் ஏராளமானோர் அவர் கேட்ட 1499 ருபாய் செலுத்துனார்கள் .கிட்டத்தட்ட 2500 பேருக்கு மேல் அப்படி பணம் செலுத்தியதும் அவர்களுக்கு மொபைல் கொடுக்காமல் மேலும் கொஞ்சம் பணம் கேட்டார் .அதை நம்பிய பலர் அவர்கிட்ட தொகையையும் செலுத்தினார்கள் .ஆனால் அவர்களுக்கு மொபைல் கொடுக்கலாமல் அவர் ஏமாற்றி வந்துள்ளார் .இதநாள் பாதித்த சிலர் சேர்ந்து கொண்டு அந்த நபர் மீது டெல்லி பொலிஸில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் விசாரித்த போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அவர்களை போலீஸ் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக அவர்கள் வலைத்தளங்களின் அமைப்பு மற்றும் டொமைன் பெயரை அடிக்கடி மாற்றுவதோடு, போலீஸ் கண்டுபிடிப்பதை கடினமாக்குவதற்கு VPA மூலம் பணம் எடுக்கவும் செய்தனர். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை அணுகக்கூடாது என்பதற்காக அவர்கள் 1,999 முதல் 7,999 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுத்துக்கொண்டனர்.இந்த நவீன மோசடி செய்தவர்களான பிரவீன் குமார் மற்றும் ரஜத் சுக்லாஆகியோரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் .ஒரே ஒரு பட்டதாரி வாலிபரை மட்டும் பிடித்துள்ளனர் .

By Admins