தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.அப்படி காணாமல் போன ஒரு நடிகைதான் பூமிகா.

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பூமிகா சாவ்லா.தெலுகு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.பத்ரி திரைப்படத்திற்கு பின்னர் ஸ்ரீகாந்துடன் ரோஜாக்கூட்டம் சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் திரைப்படங்களில் நடித்தார்.

கடைசியாக தமிழில் கொலையுதிர் காலம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.தமிழில் படங்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கில் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தார்.பிறகு தோணி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

41 வயதாகும் பூமிகா சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரும் ஆசையில் இருக்கிறார் எனவும் அதற்க்கான முதல் முயற்சி தான் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் எனவும் கூறுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், எனக்கு ஏற்ற வேடங்கள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க ரெடி என கூறியிருந்தார் பூமிகா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் பூமிகா படங்களில் இல்லாத அளவுக்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளாராம். படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அழைந்து வேறு வழியே இல்லாமல் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அம்மணி.

By spydy