திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்து வருபவர் சிவகுரு பிரபாகரன். இவர் பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், மணப்பெண்ணிடம் வித்தியாசமான முறையில் வரதட்சணைக் கேட்டுள்ளார்.

சென்னை நந்தனம் கல்லூரியில் கணிதப் பேராசிரியர் ஒருவரின் மகளான டாக்டர் கிருஷ்ணபாரதிக்கும் இவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் மணமகன், மணமகளிடம் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த பின்பே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து தற்போது திருமணம் செய்துள்ளார்.

By admin