மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பைக் அலாரம் சத்தத்திற்கு ஏற்ப சிறுவன் ஒருவன் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காடசி இணையத்தில் வைரலாகி உள்ளது.

வாகனங்களை யாராவது முறைகேடாக ஆன் செய்ய நினைத்தாலோ அல்லது திருட முயற்சி செய்தாலோ எச்சரிக்கை விடுக்கும் அலாரம் அதில் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் வாகனத்தின் உரிமையாளர்கள் உஷாராகி கொண்டு தங்கள் வாகனத்தை பாதுகாக்கலாம்.

அப்படி பைக்கில் பொருத்தியிருக்கும் அலாரம் அமைப்பை வைத்து டான்ஸ் ஆடி பிரபலமாகி இருக்கிறான் ஒரு சிறுவன். வீட்டிற்கு பொருட்கள் வாங்கி கொண்டு செல்லும் சிறுவன் ஒருவன் ஒரு பைக்கின் அருகே வந்ததும் அவற்றை கீழே வைத்துவிட்டு டான்ஸ் ஆட தொடங்குகிறான்.

டான்ஸ் ஆடியபடியே அருகிலிருந்த பைக்கை எட்டி உதைக்க, அதிலிருக்கும் அலாரம் ஆன் ஆகி சத்தமிடுகிறது. அதிலிருந்து வரும் வித்தியசமான சத்தங்களுக்கு ஏற்ப டான்ஸ் ஸ்டெப்புகளை போடுகிறான் சிறுவன்.

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா “நீண்ட நாட்கள் கழித்து இப்படி ஒரு கூலான சிந்தனையை பார்க்கிறேன். இப்போது தரையில் விழுந்து சிரித்து கொண்டிருக்கிறேன். இந்த வாரம் இப்படியாக தொடங்குகிறது…” என கருத்து தெரிவித்துள்ளார்.

By Admins