தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி அழைக்கப்படும் ‘அமராவதி’ என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்’ போன்ற பல படங்களில் நடித்தார் ‘தல’ அஜித்.
‘தல’ அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தினை பிரபல ‘நேர்கொண்ட ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘தல’ அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்த படத்தில் அஜித்துக்கு செம மாஸான போலீஸ் ரோல் என்று கூறப்படுகிறது. ‘தல’ அஜித்தின் திரை உலக வாழ்வில் ‘வலிமை’ திரைப்படம் அவருக்கு 60-வது படமாம். ‘வலிமை’ படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து கொண்டிருக்கிறார். நேற்று முன் தினம் (மே 1-ஆம் தேதி) ‘தல’ அஜித்தின் பிறந்த நாள். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#HBDThalaAjith, #AjithKumar, #தலஅஜித்’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்தார்கள் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் இணைந்து நடித்த சுஹெயில் சந்தோக்கும் ட்விட்டரில் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லியிருந்தார். மேலும், அவர் போட்டிருந்த இன்னொரு பதிவில் “நானும் அஜித் சாரும் ஒரு முறை பைக் ரைடு போயிருந்தபோது வழியில் ஒரு டீ கடையில் நிறுத்தினோம்.

அந்த டீ கடை வைத்திருக்கும் குடும்பத்தினர், அஜித் சாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். இருப்பினும், அவரிடம் அவர்கள் கேட்க தயங்கினார்கள். இருப்பினும், அஜித் சாரே அவர்களிடம் தான் உங்களிடம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி என்னை போட்டோ எடுக்க சொன்னார். அதன் பிறகு அந்த போட்டோவை பிரிண்ட் போட்டு அவர்களிடம் கொடுத்தார் அஜித் சார்” என்று சஹெயில் சந்தோக் தெரிவித்தார்.

By admin