திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து நினைவுகளாக நெஞ்சோடு தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட திருமணத்தில், மணமேடையில் இருந்து மாப்பிள்ளை செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று எல்லார் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டது. அதிலும் ஸ்மார்ட் போன்களில் பப்ஜி கேம் ஆடும் இளசுகள் இன்று ஏராளம். இந்த விளையாட்டை ஆர்வத்தோடு விளையாடுபவர்களில் பலர் அதற்கு அடிமைகளாகவே ஒருகட்டத்தில் மாறிவிடுவதையும் பார்க்க முடிகிறது

இப்போது அண்மையில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த சம்பவம் இந்த கேம் பிரியர்களின் அடிமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

மணமேடையில், திருமணம் முடிந்து மணப்பெண்ணின் அருகில் இருக்கிறார் மணமகன். ஆனால் அவரது முழுக்கவனமும் செல்போனில் இருக்கிறது. காரணம் அவர் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அப்போது மேடைக்கு வந்த ஒருவர் பரிசு பெட்டகத்தை வாழ்த்துக்கள் சொல்லிவிட்டே நீட்டுகிறார். ஆனால் மணமகன் அந்த பரிசு பெட்டகத்தை தட்டிவிட்டுவிட்டு விளையாட்டில் கண்வைக்கிறார். இந்த வீடீயோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

By admin