நம்ம ஊரு வியாபாரிகளை பொறுத்தவரைக்கும், எடுத்த உடனே கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும். ஆனால் மார்வாடிகளிடம் நயா பைசா இலாபம் கிடைத்தாலும், கஸ்டமரை கவர வேண்டும் என்ற வேட்கை இருக்கும். அவர்களுக்கு எங்கிருந்து பொருள் சப்பளை ஆகிறது? எவ்வளவு விலைக்கு கிடைக்கிறது என்பது இரகசியமாகவே இருக்கும். வெளியில் பத்து இருநூறு ரூபாய் கொடுத்து வாங்கும் பொருள், அவர்களிடத்தில் வெறும் 50 ரூபாய்க்கு கிடைக்கும்.

எந்த பொருளை நீங்கள் எடுத்து பேரம் பேசினாலும், அவர்களிடம் கட்டாயம் விலைக்குறைப்பு இருக்கும். கடைசியில் அவர்கள் லாபத்தையும் உங்களுக்கே கொடுப்பது போல, பெருந்தன்மையுடன் கம்மி விலைக்கு கொடுப்பார்கள். மார்வாடிகளை பொருத்தமட்டில், பொருளுக்கு ஒரு ரூபாய் லாபம் கிடைத்தாலும், ஒரு முறை வந்த கஸ்டமரை மீண்டும் அவர்களை நோக்கி இழுக்க வைப்பதும், அந்த கஸ்டமர் இன்னும் நாலு பேரிடம் சொல்லி, விற்பனையை பெருக்குவது அவர்களது வியாபார தந்திரமாக இருக்கும்.

எவ்வளவு சரக்கு உள்ளே வருகிறது? எவ்வளவு வெளியே போகிறது? எவை தேங்கி கிடக்கிறது என்கிற மாதிரியான எல்லா புள்ளிவிவரமும் கணக்கு நோட்டில் இருக்கும். ஒரு நாள் கூட மிஸ் ஆகாது. அவர்கள் ‘தாயைக் கொன்று சாப்பிடாதவர்கள்’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு தாய் என்பது முதலீடு ஆகும். அதாவது ஒரு ஆடு அல்லது கோழி வளர்ப்பவர்கள் அது வளர்ந்ததும் அதைக் கொன்று சாப்பிடாமல், அதன் சந்ததிகளை உருவாக்கி அவற்றில், ஒன்று இரண்டை கொன்று சாப்பிடுவார்கள்.

அது போல முதலீட்டினை எடுத்து சாப்பிடாமல், அதன் வட்டி அல்லது இலாபத்தை, அதுவும் முடிந்தவரை அதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்து சாப்பிடுவார்கள். அதனால் தான் அவர்கள் முதலீடு அழியாததோடு வளரவும் செய்கிறது. வட்டிக்கு பணம் தருபவர்கள் கடன் வாங்குபவர்களுக்கு சொல்வது, வட்டியை மட்டும் கரெக்டா கட்டிடு, எப்போ சௌகரியமோ அப்ப அசல் தந்துக்கலாம் என்று அசலைப் பற்றி கவலைப்படாதது போல சொல்வார்கள். முதல் மாத வட்டியை முழுவதுமாக கழித்து விட்டு தான் கடனை தருவார்கள். நேற்றைக்கு எவ்வளவு இலாபம் வந்ததோ, அதற்குள் மட்டுமே அவர்களுடைய அடுத்த நாள் செலவு இருக்கும். பணம் கையை கடிக்கிற மாதிரி எந்த செயல்களிலும் இறங்க மாட்டார்கள்.

ஒரு தொழிலில் நல்ல இலாபம் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால், அதற்கு எவ்வளவு முதலீடு வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருப்பார்கள். அதற்காக அவர்களிடம் கூட்டு முயற்சி இருக்கும். அவர்களிடைய தொழில் நெட்வொர்க், நீங்கள் யூகித்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். உதாரணத்துக்கு ஏதாவது ஒரு நுணுக்கமான பொருளை எடுத்துக்கொள்வோம். சேட்டாங் கடைக்கு போனால் கிடைத்துவிடும் என்று உறுதியாக சொல்லும் அளவிற்கு, எல்லாமே இருக்கும். ஆக மொத்தம் வியாபார நுணுக்கங்களை கற்க வேண்டும் என்றால், அவர்களின் நடவடிக்கைகளை கவனித்தால் பல சூட்சமங்கள் உங்களுக்கே புரியும்.

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,

தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

By admin